சென்னை,
சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை நடிகர் ரஜினிகாந்த் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் தனது மகள் சவுந்தர்யாவின் திருமணத்திற்கான அழைப்பிதழை வழங்கினார்.
இத்திருமணத்தில், நடிகர் ரஜினிகாந்தின் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்வர் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டு இருந்தது.
சமீபத்தில் ரஜினிகாந்த் தனது மகள் சவுந்தர்யாவின் திருமணத்திற்கு திருநாவுக்கரசர், திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்ததாக தகவல் தெரிவித்தது.
தொடர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை நடிகர் ரஜினிகாந்த் நேற்று சந்தித்து திருமணத்திற்கு அழைப்பு விடுத்தார். இந்த சந்திப்பில் அரசியல் விசயம் எதுவும் இல்லை என நிருபர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.