சினிமா செய்திகள்

நடிகர் ரஜினியின் 171-வது படத்தின் பெயர் மற்றும் டீசர் வெளியீடு

நடிகர் ரஜினியின் 171-வது படத்திற்கு 'கூலி' என பெயரிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி

ரஜினி ஜெயிலர் படத்திற்கு பிறகு வேட்டையன் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படம் 2024 அக்டோபர் மாதத்தில் வெளியாக இருக்கிறது. அடுத்தபடியாக ரஜினி தலைவர் 171 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். அதே சமயம் தலைவர் 171 படம் தொடர்பான அடுத்த அடுத்த அப்டேட்கள் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதன்படி தலைவர் 171 படத்தில் நடிகர் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், ரஜினியின் 171-வது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதில், படத்தின் பெயர் 'கூலி' என அறிவிக்கப்பட்டுள்ளது.

 இதற்கிடையே, ரஜினிக்கு வில்லனாக நடிகர் மைக் மோகன் நடிக்கவுள்ளதாகவும், முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்