சினிமா செய்திகள்

நடிகர் சித்தார்த் காட்டம்

நடிகர் சித்தார்த் சமூக வலைத்தளத்தில் அரசியல் சமூக விஷயங்களில் தனது பார்வையை கருத்துக்களாக தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.

தினத்தந்தி

நடிகர் சித்தார்த் சமூக வலைத்தளத்தில் அரசியல் சமூக விஷயங்களில் தனது பார்வையை கருத்துக்களாக தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். இது பல நேரங்களில் சர்ச்சைகளை ஏற்படுத்தி அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் விவாதங்களை ஏற்படுத்துகின்றன.

இந்த நிலையில் நாடு முழுவதும் நீட் தேர்வு நடந்ததையொட்டி டுவிட்டரில் ஒருவர் நடிகர் சித்தார்த்துக்கு எழுப்பிய கேள்வியில், நீட் தேர்வை ரத்து செய்வதாக தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு இப்போது தேர்வு நடத்தப்படுகிறதே. நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்'' என்று குறிப்பிட்டார்.

இது சித்தார்த்துக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அவருக்கு சித்தார்த் காட்டமாக பதில் அளித்துள்ளார். சித்தார்த் வெளியிட்டுள்ள பதிவில், மூதேவி. கோபமோ சந்தேகமோ வந்தா, துப்பிருந்தா போய் நீ கேளு. இல்ல உங்கப்பன கேளு. நான் என் வேலையைதாண்டா பாக்கறன். பொறுக்கி. இதுவே வேலையா போச்சு. டுவிட்டரை டாய்லட்டாக்கி வச்சிருக்காங்க. வேற எங்கே மலரும். சாக்கடையில்தான் மலரும். எழவு'' என்று கூறியுள்ளார்.

இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் பரபரப்பாகி உள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்