சினிமா செய்திகள்

விஜயகாந்த் குடும்பத்தினருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் ஆறுதல்

விஜயகாந்தின் நினைவிடத்தில் தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சென்னை,

நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28-ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இவரது மறைவு தமிழகம் முழுவதும் உள்ள மக்களை பெரிதும் பாதித்தது. விஜயகாந்தின் உடல் இறுதி அஞ்சலிக்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்தது. இவரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர்.

மேலும் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் நேரிலும், சமூக வலைதளத்தின் மூலமாகவும் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து விஜயகாந்தின் நினைவிடத்தில் தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடன் சென்றிருந்தார். விஜயகாந்த் குடும்பத்தினருக்கு சிவகார்த்திகேயன் ஆறுதல் தெரிவித்தார். மேலும், அங்கு வைக்கப்பட்டு இருந்த அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை