சினிமா செய்திகள்

நடிகர் சிவகுமாருக்கு டாக்டர் பட்டம்

இன்று நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதை அவருக்கு வழங்குகிறார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாடு இசை மற்றும் கவின் பல்கலைக் கழகம் சார்பில் நடிகர் சிவகுமார், ஓவியர் சந்துரு ஆகியோருக்கு மதிப்புமிக்க டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதை அவருக்கு வழங்குகிறார்.

கடந்த 1965-ம் ஆண்டு வெளியான காக்கும் கரங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சிவகுமார். 1967-ல் வெளியான கந்தன் கருணை திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை பெற்று தந்தது.

இவர் கடைசியாக 2001-ல் வெளியான அஜித், ஜோதிகாவின் பூவெல்லாம் உன் வாசம் படத்தில் நடித்திருந்தார். சில சீரியல்களிலும் நடித்திருக்கிறார். தற்போது நடிப்பை நிறுத்திவிட்டு சொற்பொழிவு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்