சினிமா செய்திகள்

"மனதை என்னமோ செய்கிறது" - மாமன்னன் பாடல் குறித்து நடிகர் சூரி ட்வீட்

நடிகர் வடிவேலு பாடியுள்ள 'ராசா கண்ணு' பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தினத்தந்தி

சென்னை,

பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் 'மாமன்னன்'. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து நேற்று இப்படத்தின் முதல் பாடலான 'ராசா கண்ணு' பாடல் வெளியானது. நடிகர் வடிவேலு பாடியுள்ள இந்த பாடல், தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த பாடல் குறித்து நடிகர் சூரி தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறேன், மனதை என்னமோ செய்கிறது இந்த பாடல். மாமன்னன் படக்குழுவினருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறேன், மனதை என்னமோ செய்கிறது இந்த பாடல் #RaasaKannu - https://t.co/pmmhUPuaL3#MAAMANNAN படக்குழுவினர் க்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் @Udhaystalin@mari_selvaraj @arrahman #Vadivelu @KeerthyOfficial #FahadhFaasil @RedGiantMovies_ @thenieswar pic.twitter.com/c2eCRUMQZ8

Actor Soori (@sooriofficial) May 20, 2023 ">Also Read:

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு