சென்னை,
பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். நடிகர் விஜயைக் கண்ட அவரது ரசிகர்கள் ஆர்வ மிகுதியில் அவரை சூழந்து கொண்டனர். அப்போது லேசான தள்ளு முள்ளு ஏற்படும் சூழலும் உருவானது.
இதையடுத்து, காவல்துறையினர் விஜயை பாதுகாப்பாக வெளியே அழைத்துச்செல்ல முற்பட்டனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் ரசிகர்கள் சிலர் கீழே விழுந்தனர். அப்போது கீழே விழுந்த ரசிகர்களின் காலணிகளை விஜய் தாமாக முன் வந்து எடுத்துக்கொடுத்த சம்பவம் ரசிகர்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.