சினிமா செய்திகள்

அடுத்த படத்தில் அஜய் ஞானமுத்துவுடன் மீண்டும் இணைய உள்ளதாக நடிகர் விக்ரம் தகவல்

‘கோப்ரா’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம் அடுத்த படத்தில் மீண்டும் இயக்குனர் அஜய் ஞானமுத்துவுடன் இணைய உள்ளார்.

சென்னை,

அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள 'கோப்ரா', மணிரத்தினம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து, நடிகர் விக்ரம் அடுத்ததாக பா.ரஞ்சித் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் கோப்ரா படக்குழுவினருடன் இணைந்து நடிகர் விக்ரம் தனது ரசிகர்களுடன் டுவிட்டரில் கலந்துரையாடினார். அப்போது தனது 62-வது படம் குறித்த தகவல் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் தனது அடுத்த படத்தில் இயக்குனர் அஜய் ஞானமுத்துவுடன் மீண்டும் இணைய உள்ளதாக விக்ரம் தெரிவித்துள்ளார்.,

'கோப்ரா' திரைப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஜான் விஜய் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விக்ரம் 7 வித்தியாசமான தோற்றங்களில் நடித்துள்ள இப்படம் வரும் 31-ந்தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...