இக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஷால், கேளிக்கை வரியை எங்களால் கட்ட முடியாது. தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான அடுத்த தேர்தல் 2018ம் ஆண்டு செப்டம்பரில் நடைபெறும் என கூறினார்.
சிவாஜி சிலை பீடத்தில் இருந்து நீக்கப்பட்ட கருணாநிதி பெயரை மீண்டும் சேர்க்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது என அவர் கூறியுள்ளார். கேளிக்கை வரி பற்றி பேசுவதற்காக நடிகர் சங்க நிர்வாகிகள் அக்டோபர் 10ல் (செவ்வாய் கிழமை) முதல் அமைச்சரை சந்திக்க உள்ளனர் என்றும் நடிகர் விஷால் கூறியுள்ளார்.