சினிமா செய்திகள்

கவர்ச்சி காட்டியும் வாய்ப்பு இல்லாமல் தவிக்கும் அஞ்சலி

புதுப்புது கதாநாயகிகளின் வரவால் அஞ்சலிக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தாராள கவர்ச்சி காட்ட தயார் என்று அறைகூவல் விடுத்தும் வாய்ப்புகள் வாசல் கதவை தட்டவில்லை.

தினத்தந்தி

'கற்றது தமிழ்', 'அங்காடித்தெரு', 'எங்கேயும் எப்போதும்' போன்ற படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் அஞ்சலி. எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிக்கும் திறமை கொண்ட நடிகை என பெயர் பெற்றவர்.

ஆனாலும் எதிர்பார்த்தபடி பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதையடுத்து கொஞ்சம் கவர்ச்சியாக நடிக்கத் தொடங்கினார். இதனால் ஓரிரு படங்களில் அஞ்சலியை இன்னும் அழகாகவே பார்க்க முடிந்தது.

புதுப்புது கதாநாயகிகளின் வரவால் அஞ்சலிக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தாராள கவர்ச்சி காட்ட தயார் என்று அறைகூவல் விடுத்தும் வாய்ப்புகள் வாசல் கதவை தட்டவில்லை. இதற்கு மேல் என்னதான் செய்வது? என்று அஞ்சலி வருத்தத்தில் இருக்கிறார்.

அதேவேளை கிடைக்கும் வாய்ப்புகளையும் அஞ்சலி தக்கவைத்து வருகிறார். 'மாச்சர்லோ நியோஜாகவர்கம்' என்ற தெலுங்கு படத்தில் அஞ்சலி கவர்ச்சி நடனம் ஆடியிருக்கிறார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து