சினிமா செய்திகள்

தனுஷுடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் “காந்தா” பட நடிகை

தனுஷுடன் நடிக்க வேண்டும் என ஆசை எல்லா நடிகைகளுக்கும் இருக்கும் என்று நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

தென்னிந்திய திரைப்பட உலகில் மிஸ்டர் பச்சன் மற்றும் கிங்டம் படங்கள் மூலம் அறிமுகமான நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ், தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து, முழு திரைத்துறையின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதன் மூலம், ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக உருவெடுத்துள்ளார். மகேஷ் பாபு இயக்கத்தில் உருவாகி உள்ள ஆந்திரா கிங் தாலுகா படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்து உள்ளார். இப்படம் வருகிற 27-ந்தேதி வெளியாக உள்ளது.

தற்போது துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ போர்ஸ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியான படம் காந்தா. இப்படம் ரசிர்களிடையே வரவேற்பை பெற்று வசூல் குவித்து வருகிறது. இப்படம் வெளியான 3 நாட்களில் ரூ 25 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

இந்த நிலையில், தனக்கு நடிகர் தனுஷை ரொம்ப பிடிக்கும் என நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், எனக்கு தனுஷ் சார ரொம்பப் பிடிக்கும். எல்லா நடிகைகளுக்கும் தனுஷுடன் பணியாற்ற வேண்டும் என ஆசை இருக்கும். எனக்கும் அவருடன் இணைந்து பணியாற்ற ஆசை இருக்கு. விரைவில் தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

View this post on Instagram

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து