சினிமா செய்திகள்

நடிகை தீபிகா படுகோனேவுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

“மூக்கை அறுப்போம்” என்ற மிரட்டல் எதிரொலியால் நடிகை தீபிகா படுகோனேவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

மும்பை,

நடிகை தீபிகா படுகோனே நடித்த பத்மாவதி என்ற சரித்திர படம், டிசம்பர் 1-ந்தேதி வெளியாகிறது. அதே சமயத்தில், ராஜபுத்திர வம்சத்தினரின் உணர்வுகளை புண்படுத்தும்வகையில் இருப்பதாக கூறி, அப்படத்துக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. எதிர்ப்பாளர்களுக்கு தீபிகா படுகோனே கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், ஸ்ரீராஜ்புத் கர்னி சேனா என்ற அமைப்பின் தலைவர் மகிபால் சிங் மக்ரானா, ஆத்திரமூட்டும் வகையில் பேசுவதை கைவிடாவிட்டால், ராமாயணத்தில் சூர்ப்பனகையின் மூக்கை அறுத்ததுபோல், தீபிகா படுகோனேவின் மூக்கை அறுப்போம் என்று நேற்று மிரட்டல் விடுத்தார்.

இதையடுத்து, தீபிகா படுகோனேவுக்கு மும்பை போலீசார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். தீபிகாவின் வீடு மற்றும் அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுபோல், இப்படத்தின் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு ஏற்கனவே பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு