சினிமா செய்திகள்

மஞ்சு வாரியரிடம் ரூ.5.75 கோடி இழப்பீடு கோரும் நடிகை

மஞ்சு வாரியரிடம் ரூ.5.75 கோடி இழப்பீடு கேட்டு நடிகை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.

தினத்தந்தி

சென்னை,

மலையாள சினிமாவின் முன்னனி நடிகைகளில் ஒருவராக இருக்கும் மஞ்சு வாரியர், தமிழில் 'அசுரன், துணிவு' போன்ற படங்களில் நடித்துள்ளார். அதனைத்தொடர்ந்து, 'விடுதலை 2' , 'மிஸ்டர் எக்ஸ்' போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது, இவர் 'புட்டேஜ்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். சைஜு ஸ்ரீதரன் இயக்கியுள்ள இப்படத்தில், மஞ்சு வாரியருடன் இணைந்து விஷக் நாயர், காயத்ரி அசோக், சீத்தல் தம்பி ஆகியோர் நடித்துள்ளனர். நேற்று திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகை மஞ்சு வாரியரிடம் ரூ.5.75 கோடி இழப்பீடு கேட்டு 'புட்டேஜ்' படத்தில் நடித்துள்ள சீத்தல் தம்பி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், மஞ்சு வாரியரின் மூவி பக்கெட் நிறுவனம் தயாரித்த 'புட்டேஜ்' படத்தில் போதிய பாதுகாப்பின்றி காட்டுக்குள் படப்பிடிப்பு நடத்தியதால் தனக்கு காயம் ஏற்பட்டதாகக் கூறி குற்றஞ்சாட்டி இருக்கிறார். தனக்கு ரூ.1.80 லட்சம் மட்டுமே ஊதியம் கொடுத்ததாகவும், சிகிச்சைக்கே பல லட்சம் செலவானதாகவும் கூறியுள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு