சென்னை
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிக சர்ச்சையில் சிக்கியிருப்பது நடிகை காயத்ரி ரகுராம் தான். பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவை திட்டும் காயத்ரி ரகுராம் சேரி பிகேவியர் என்று கூறி சேரிமக்களை இழிவுபடுத்தியுள்ளார் என கூறப்பட்டது. இதற்கிடையில் சேரி என்ற வார்த்தையை கூறியதால் பொதுமக்களின் அதிக எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளார்.
ஆனால், எனது மகளை தவிர அந்த நிகழ்ச்சியில் உள்ள அனைவரும் நடிக்கின்றனர் என காயத்ரியின் தாய் கிரிஜா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
சேரி தொடர்பாக காயத்ரி ரகுராம் பேசிய வார்த்தைகள் மக்களை பாதித்திருந்தால் மன்னிப்பு கேட்கிறேன். காயத்ரி ரகுராமை கேவலபடுத்த வேண்டாம் என கேட்டுகொண்டார்.