சினிமா செய்திகள்

எழுத்தாளராக விரும்பும் நடிகை கவுரி கிஷன்

சினிமா துறையில் பெண் எழுத்தாளர்கள் வந்தால் பெண் முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்கள் அதிகமாக உருவாகும். தானும் எழுத முயற்சி செய்து கொண்டிருப்பதாக நடிகை கவுரி கிஷன் கூறினார்.

தினத்தந்தி

தமிழில் விஜய் சேதுபதியின் '96' படம் மூலம் அறிமுகமானவர் கவுரி கிஷன். தொடர்ந்து விஜய்யுடன் மாஸ்டர், தனுசின் கர்ணன் மற்றும் பிகினிங் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தற்போது 'ஸ்ரீதேவி ஷோபன் பாபு' என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

சினிமா அனுபவங்கள் குறித்து கவுரி கிஷன் அளித்துள்ள பேட்டியில், "எனக்கு ஆரம்பத்தில் சினிமா நடிகையாக வேண்டும் என்ற எண்ணமே இல்லை. 11-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது '96' ஆடிசனுக்கு சென்று தேர்வாகி விட்டேன். அதன் பிறகு நடிகையாக நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற ஆசை உருவாகிவிட்டது.

தெலுங்கில் ஸ்ரீதேவி சோபன் பாபு நான் கதாநாயகியாக நடிக்கும் முதல் படம். இந்த படத்தில் நான் மாடர்னாக நடித்தேன். நான் சமந்தாவைப்போல் இருப்பதாக பலரும் சொல்கிறார்கள். இது பெருமையாக இருக்கிறது. சமந்தாவை போல எனக்கும் அனைத்து மொழிகளிலும் நடிக்க வேண்டும் என ஆசையாக உள்ளது.

சினிமா துறையில் பெண் எழுத்தாளர்கள் குறைவாக இருக்கிறார்கள். அதிகம் பெண் எழுத்தாளர்கள் வரவேண்டும். அப்போதுதான் பெண் முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்கள் அதிகமாக உருவாகும். நான் கூட எழுத முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்'' என்றார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து