சினிமா செய்திகள்

நடிகை இலியானா தற்கொலை முயற்சியா?

தமிழில் கேடி படத்தில் அறிமுகமான இலியானா விஜய் ஜோடியாக நண்பன் படத்தில் நடித்து பிரபலமானார். தெலுங்கு, இந்தியிலும் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார்.

தினத்தந்தி

இலியானாவும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஆண்ட்ரூ நீபோனும் காதலித்தனர். இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை இலியானா அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு காதலை உறுதிப்படுத்தி வந்தார். ரகசிய திருமணம் நடந்து விட்டதாகவும் கிசுகிசுத்தனர்.

ஆனால் சமீபத்தில் இலியானாவுக்கும், காதலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இலியானா கர்ப்பமாக இருந்தார் என்றும், கருக்கலைப்பு செய்தார் என்றும், காதல் தோல்வி மன உளைச்சலில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்றும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது.

இதற்கு இலியானா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, நான் கர்ப்பமாக இருந்தேன். கருக்கலைப்பு செய்தேன் என்று வெளியான தகவல்கள் எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. நான் தற்கொலைக்கு முயன்று பிறகு உயிர்பிழைத்ததாக எனது வேலைக்காரி சொன்னார் என்றும் தகவல் வெளியானது. எனக்கு வேலைக்காரியே இல்லை. நான் தற்கொலைக்கு முயற்சி செய்யவும் இல்லை. இப்போது உயிருடன்தான் இருக்கிறேன்'' என்றார்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்