சினிமா செய்திகள்

கோ பட நாயகி திருமணம் : நடிகர்-நடிகைகள் நேரில் வாழ்த்து

நடிகை கார்த்திகாவும், மும்பை தொழில் அதிபர் ரோஹித் என்பவரும் காதலித்தனர். சமீபத்தில் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

தினத்தந்தி

தமிழ் திரையுலகில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ராதா. இவருக்கு கார்த்திகா, துளசி ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

கார்த்திகா தமிழில் ஜீவா ஜோடியாக கோ படத்தில் அறிமுகமானார். அருண் விஜய்யுடன் வா டீல், பாரதிராஜா இயக்கிய அன்னக்கொடி, விஜய்சேதுபதியுடன் புறம்போக்கு என்கிற பொதுவுடமை உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

கார்த்திகாவும், மும்பை தொழில் அதிபர் ரோஹித் என்பவரும் காதலித்தனர். சமீபத்தில் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

நிச்சயதார்த்த புகைப்படங்களை வலைத்தளத்தில் வெளியிட்ட கார்த்திகா, "உன்னை சந்திக்க வேண்டும் என்பது விதி. உன்னை விரும்பியது மேஜிக்காக இருந்தது. உன்னுடன் சேர்ந்து பயணிப்பதற்கான கவுண்டவுன் தொடங்கி விட்டது'' என்ற பதிவையும் பகிர்ந்து இருந்தார்.

இந்த நிலையில் கார்த்திகா-ரோஹித் திருமணம் திருவனந்தபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடந்தது.

இதில் கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன், நடிகர்கள் மம்முட்டி, சிரஞ்சீவி, மோகன்லால், பாக்யராஜ், சுரேஷ்கோபி, திலீப், பிரபு, சத்யராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.

நடிகைகள் ராதிகா, ரேவதி, குஷ்பு, சரிதா, சுகாசினி ஆகியோரும் நேரில் வாழ்த்தினர். திருமணத்துக்கு வந்தவர்களை ராதாவின் சகோதரியும், நடிகையுமான அம்பிகா, மகள் துளசி ஆகியோர் வரவேற்றார்.

View this post on Instagram

View this post on Instagram

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை