தற்போது தனது மகளுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டார்.
அந்த படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அழகாக இருப்பதாக பாராட்டினார்கள். வெளியில் பெரியார் கொள்கைகளை பேசினாலும் உங்கள் குழந்தைகளை நன்றாக வளர்த்து இருக்கிறீர்கள் என்றும் குஷ்புவை புகழ்ந்தனர். அந்த புகைப்படங்களை வலைத்தளத்திலும் அவர்கள் பகிர்ந்தனர்.
ஆனால் ஒருவர் புகைப்படத்தை கேலி செய்து மோசமான வார்த்தையை பதிவிட்டார். இதனால் கோபமான குஷ்பு, பன்னி, முதல்ல உன் மூஞ்சியை கண்ணாடில பாரு. நாய் கூட பார்க்காது. வாந்தி எடுத்துட்டு போயிடும் என்று கடுமையான வார்த்தையால் பதிலடி கொடுத்தார். இது சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பலரும் குஷ்புவுக்கு ஆதரவு தெரிவித்து கருத்துகள் பதிவிட்டனர். நடிகை ராதிகா குஷ்புக்கு ஆதரவாக வெளியிட்டுள்ள பதிவில் இன்டர்நெட் சைக்கோக்கள், ஒரு குழந்தையை பற்றி பேசுவதை ஏற்க முடியாது என்று கண்டித்துள்ளார்.