சினிமா செய்திகள்

நடிகை மாளவிகா மோகனனின் இன்ஸ்டா பதிவு வைரல்

நடிகை மாளவிகா மோகனன் 'தங்கலான்' படத்தில் ஆர்த்தி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

இயக்குனர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'தங்கலான்'. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம் கடந்த 15-ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது.

ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகயும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தங்கலான் முதல் நாளில் மட்டும் உலகளவில், ரூ.26 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

இந்தநிலையில் நடிகை மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மாளவிகா மற்றும் சியான் விக்ரம் இருவரும் ரத்தத்தில் நனைந்து இருப்பது போல உள்ளனர். இவர் பதிவிட்ட இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 'தங்கலான்' படத்தில் ஆர்த்தி என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இப்படத்தில் இவருடைய கதாபாத்திரம் சவாலானது என்பதால் மிகவும் மெனக்கட்டுள்ளார் என்பது இந்த பதிவில் தெரிகிறது.

இதற்கிடையில் நடிகை மாளவிகா மோகனன் 'யுத்ரா', 'தி ராஜா சாப்' மற்றும் 'சர்தார் 2' ஆகிய படங்களில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து