சினிமா செய்திகள்

கந்துவட்டி கும்பலால் நடிகை மஞ்சு வாரியர் உயிருக்கு ஆபத்தா?

மலையாள நடிகை மஞ்சு வாரியர் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று மலையாள இயக்குநர் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டு உள்ளார்.

தினத்தந்தி

பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர். இவர் தமிழில் தனுஷ் ஜோடியாக அசுரன் படத்தில் நடித்துள்ளார். நடிகையை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான, நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிரபல மலையாள டைரக்டர் சணல் குமார் சசிதரன் தனது முகநூல் பக்கத்தில், நடிகை மஞ்சு வாரியர் உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும், அவரை கந்து வட்டிக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர் என்றும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார்.

இதுகுறித்து சணல் குமார் சசிதரன் கூறும்போது, .நான் மஞ்சு வாரியரை வைத்து படம் எடுத்துள்ளேன். ஆனாலும் அவருடன் தனியாக பேச முடியவில்லை. மஞ்சு வாரியரின் உதவியாளர்களாக இருந்து பின்னர் நிர்வாக தயாரிப்பாளர்களாக மாறிய பினிஸ் சந்திரன், பினு நாயர் ஆகியோர் தங்கள் கட்டுப்பாட்டில் அவரை வைத்துள்ளனர். ஒரு நிகழ்ச்சியில் நான் மஞ்சுவாரியரிடம் பேச முற்பட்டபோது, வலுக்கட்டாயமாக இழுத்து சென்று விட்டனர். மஞ்சு வாரியரை வீட்டு காவலில் வைத்துள்ளனர். ஏதேனும் வீடியோவை வைத்து மஞ்சுவாரியரை பிளாக் மெயில் செய்கின்றனரோ என்ற சந்தேகம் உள்ளது. இதுகுறித்து மலையாள நடிகைகள் சங்கத்தில் புகார் அளித்துள்ளேன். என்று கூறியுள்ளார்.

இதற்கு மஞ்சுவாரியர் தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து