சினிமா செய்திகள்

ராகுல் காந்தியை சந்தித்து வாழ்த்து பெற்ற நடிகை மேகா ஆகாஷ்- சாய் விஷ்ணு தம்பதி

ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ள புகைப்படங்களை நடிகை மேகா ஆகாஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தினத்தந்தி

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'பேட்ட' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மேகா ஆகாஷ் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து 'வந்தா ராஜாவாதான் வருவேன்', 'என்னை நோக்கி பாயும் தோட்டா' உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். இதையடுத்து அவர் நடிப்பில் இந்தாண்டு வடக்குப்பட்டி ராமசாமி, மழை பிடிக்காத மனிதன் உள்ளிட்ட படங்கள் வெளியானது. இதையடுத்து தற்போது தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

நடிகை மேகா ஆகாஷ் சமீபத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசரின் 2-வது மகனான சாய் விஷ்ணுவை திருமணம் செய்துகொண்டார். திருமண விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

இந்நிலையில் இன்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து மேகா ஆகாஷ், சாய் விஷ்ணு தம்பதி வாழ்த்து பெற்றனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை மேகா ஆகாஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ராகுல் காந்தி உடனான சந்திப்பு மகிழ்ச்சியளிக்கும் வகையில் இருந்ததாகக் கூறியுள்ளார்.

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்