சென்னை,
நட்சத்திர நடிகை நிவேதா தாமஸின் தம்பி, சினிமாவில் ஹிரோவாக அறிமுகமாகிறார். மலையாள நடிகை நிவேதா தாமஸ், தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். கமலுடன்பாபநாசம், விஜய்யுடன் ஜில்லா, ரஜினியுடன் தர்பார் படங்களில் நடித்து கவனம் பெற்றவர்.
அவரது தம்பி இப்போது ரசிகர்களை மகிழ்விக்கத் தயாராக உள்ளார். நிவேதா தாமஸின் தம்பி நிகில் தாமஸ் சினிமாவில் ஹீரோவாக நடிக்க வருகிறார்.
நிகில் தாமஸ் கதாநாயகனாக நடிக்கும் படத்திற்கு 'பெங்களூர் மகாநகரம்லோ பலகா' என்று பெயரிடப்பட்டுள்ளது. இயக்குனர் இரட்டையர்களான மஹி - ராஜ் இதை இயக்குகிறார்கள். மேட் மற்றும் ஜாதி ரத்னலு போன்ற நகைச்சுவை பொழுதுபோக்கு படங்களில் எழுத்தாளராகப் பணியாற்றிய பிரவீன் பட்டு, இந்தப் படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதுகிறார்.
விஸ்வதீப் இப்படத்க்திற்கு இசையமைக்கிறார். சாயா கிரியேஷன்ஸ் மற்றும் பால்கன் என்டர்டெயின்மென்ட்ஸ் பேனரின் கீழ் அகில் யம்மன்நகரி, எம்எஸ்என் மூர்த்தி மற்றும் சிஎச் வி சர்மா ஆகியோர் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்கள்.
View this post on Instagram