சினிமா செய்திகள்

நடிகை நூரின் ஷெரிப் திருமண நிச்சயதார்த்தம்

நூரின் ஷெரிப்புக்கு மலையாள நடிகரும் திரைக்கதையாசிரியருமான பாஹிம் சபருடன் திருமண நிச்சயார்த்தம் முடிந்துள்ளது.

தினத்தந்தி

மலையாளத்தில் வெளியான 'ஒரு அடார் லவ்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நூரின் ஷெரீப். இந்த படம் தமிழிலும் வெளியானது. 'ஒரு அடார் லவ்' படத்தில் முதலில் நூரின் ஷெரிப்பைத்தான் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தனர். ஆனால் பிரியா வாரியர் புருவங்களை உயர்த்தி கண் அடிக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானதால் அவரை கதாநாயகியாக்கி விட்டு நூரின் ஷெரிப்பை இரண்டாவது கதாநாயகியாக மாற்றி விட்டனர். இது நூரின் ஷெரிப்புக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. படம் வெளியான பிறகு பிரியா வாரியரை விட நூரின் ஷெரிப் நடிப்பையே ரசிகர்கள் விரும்பினார்கள். அவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்தன. தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். இந்த நிலையில் நூரின் ஷெரிப்புக்கு மலையாள நடிகரும் திரைக்கதையாசிரியருமான பாஹிம் சபருடன் திருமண நிச்சயார்த்தம் முடிந்துள்ளது. நண்பர்களாக பழகி பின்னர் காதலித்து திருமணம் செய்து கொள்ள இருப்பதாக நூரின் ஷெரிப் தெரிவித்து உள்ளார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை