சினிமாவில் பாலியல் தொல்லைகள் இருப்பது பற்றி தைரியமாக பேசினார். கதாபாத்திரங்களையும் கவனமாகவே தேர்வு செய்கிறார். ஆபாச அரைகுறை உடையில் நடிப்பதை தவிர்க்கிறார்.
தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இல்லாத கதைகளில் பெரிய ஹீரோக்கள் ஜோடியாக நடிப்பதாக இருந்தாலும் மறுத்து விடுகிறார். அப்படிப்பட்ட பார்வதி தனது சிகை அலங்காரத்தை இப்போது மாற்றி இருக்கிறார். மாடர்ன் இளைஞர்கள் தலையின் ஓரத்தில் முடியை வழித்து இருப்பதுபோல் தனது தலைமுடியின் ஒரு பகுதியை கத்தரித்து இருக்கிறார்.
அவரது இந்த புதிய ஹேர் ஸ்டைல் படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த தோற்றத்தை பார்த்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளனர்.