சினிமா செய்திகள்

நடிகை ரகுல்பிரீத் சிங் நட்பு வட்டாரத்தில் 20 பேர்

எனது நட்பு வட்டாரத்தில் 20 பேர் இருக்கிறார்கள் என்று நடிகை ரகுல்பிரீத் சிங் கூறியுள்ளார்.

தெலுங்கு பட உலகில் மது விருந்து நிகழ்ச்சிகள் அடிக்கடி நடத்தப்படுகிறது. இதில் நடிகர்-நடிகைகள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் என்று திரையுலகை சேர்ந்த பலரும் கலந்து கொள்கிறார்கள். பட விழாக்களிலும், படங்கள் வெற்றி பெறும் போதும் நடிகர்-நடிகைகளின் பிறந்த நாட்களிலும் இந்த மது விருந்து நட்சத்திர ஓட்டல்களில் தடபுடலாக நடத்தப்படுகிறது.

அங்குள்ள நடிகர்கள் பலருக்கு மது பழக்கம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகை ரகுல்பிரீத் சிங்கிடம் இந்த மது விருந்து குறித்து கேட்டபோது அவர் கூறிதாவது:-

எனக்கு மது அருந்தும் பழக்கம் கிடையாது. என்னை சுற்றி இருப்பவர்கள் மது குடித்து சந்தோஷமாக இருந்தாலும் நான் அதை தொடுவது இல்லை. எனக்கும் தெலுங்கு நடிகர் ராணாவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாகவும் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

நான் எங்கு சென்றாலும் ராணாவுடன் உங்களுக்கு காதலாமே என்றுதான் கேட்கிறார்கள். எப்போது கேட்டாலும் ஒரே பதில்தான். எனக்கும் ராணாவுக்கும் காதல் இல்லை. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். எனது நட்பு வட்டாரத்தில் 20 பேர் இருக்கிறார்கள். அதில் ராணாவும் உள்ளார். நான் ஐதராபாத்தில் வசிக்கிறேன். என் அம்மாவும் அப்பாவும் டெல்லியில் இருக்கிறார்கள். தெலுங்கு நடிகர்கள் எல்லோருடனும் நட்புடன்தான் பழகுகிறேன்.

இவ்வாறு ரகுல்பிரீத் சிங் கூறினார்.

தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கதாநாயகியாக நடித்த பிறகு ரகுல்பிரீத் சிங்குக்கு தமிழில் பட வாய்ப்புகள் குவிகிறது. செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக நடிக்க உள்ளார். கார்த்தியுடன் இன்னொரு படத்திலும் நடிக்க பேச்சு வார்த்தை நடக்கிறது. மேலும் பல புதிய படங்களுக்கு கதை கேட்டு வருகிறார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு