சினிமா செய்திகள்

விமான நிலையத்தில்... 'ஜிம்' அமைக்க கோரும் நடிகை ராஷ்மிகா

தினத்தந்தி

தமிழில் கார்த்தியுடன் சுல்தான், விஜய் ஜோடியாக வாரிசு படங்களில் நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராஷ்மிகா வெளியிட்டுள்ள பதிவில், "விமான நிலையத்தில் மட்டும் 'ஜிம்' ஏன் இல்லை? நான் எப்போது விமான பயணம் செய்ய நேரிடுகிறதோ அப்போதெல்லாம், இரண்டு மணி நேரத்துக்கு முன்பாகவே விமான நிலையத்திற்கு வந்து விடுகிறேன்.

விமானம் வரும் வரை வெறுமனே ஏதோ யோசித்துக் கொண்டே இருப்பேன். அதே நேரம் விமான நிலையத்தில் 'ஜிம்' இருந்திருந்தால் அந்த இரண்டு மணி நேரம் உடற்பயிற்சி செய்து கொள்ளலாம் இல்லையா?'' என்று குறிப்பிட்டு இருந்தார். அதோடு, "எனது இந்த ஆலோசனை நல்ல யோசனைதானே? எத்தனை பேருக்கு இது உபயோகப்படுமோ'' என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு நடிகை காஜல் அகர்வால் பதிலளிக்கையில், "நானும் ஒவ்வொரு முறையும் இதே போல்தான் நினைத்துக் கொள்கிறேன். எனது வாழ்நாள் முழுவதும் இதுகுறித்தே யோசித்துக் கொண்டிருப்பேன்'' என்று கூறி ஒரு சிரிக்கும் எமோஜியை வைத்தார்.

இவர்கள் இருவரின் பதிவுகள் தற்போது வைரலாகி வருகிறது. விரைவில் உங்களது கோரிக்கை நிறைவேற வேண்டும் என ரசிகர்களும் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து