சினிமா செய்திகள்

திருவண்ணாமலையில் நடிகை ரோஜா சாமி தரிசனம்

ஆந்திர மாநில முன்னாள் மந்திரியும் நடிகையுமான ரோஜா திருவண்ணாமலையில் பரணி தீப தரிசனம் செய்தார்.

தினத்தந்தி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா தீபத்திருவிழா நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு நேற்று அதிகாலையில் கோவில் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோவிலுக்கு ஆந்திர மாநில முன்னாள் மந்திரியும் நடிகையுமான ரோஜாவும் வந்திருந்து பரணி தீப தரிசனம் செய்தார்.

பின்னர் அவர் கூறுகையில், பரணி தீபத்தை பார்க்க அதிர்ஷ்டம் வேண்டும். இதனை எல்லோராலும் பார்க்க முடியாது. கடவுள் என்னை அழைத்துள்ளார். தீபம் ஏற்றி உள்ளேன். பரணி தீபதரிசனம் மனநிறைவாக உள்ளது என்றார். சாமி தரிசனம் செய்து முடித்த பின்னர் வெளியே வந்த போது, ரசிகர்கள் பலரும் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து