சினிமா செய்திகள்

தங்க ஆடையில் ஜொலித்த நடிகை...வீடியோ வைரல்

பாலிவுட் நடிகை சாரா அலிகான், தங்க நிறத்தில் ஆடை அணிந்து வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

தினத்தந்தி

டெல்லி,

டெல்லியில் நடைபெற்ற பேஷன் ஷோவில் கலந்துகொண்ட பாலிவுட் நடிகை சாரா அலிகான், தங்க நிறத்தில் ஆடை அணிந்து வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

இதில் ஏராளமான மாடல்கள் அணிவகுத்து வந்தநிலையில், நடிகை சாரா அலிகானின் ராம்ப் வாக் ரசிகர்களிடத்தில் ஆரவாரத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் சாரா அலிகான். பிரபல பாலிவுட் நடிகரான மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் வெளியான கேதார்நாத் படத்தில் நடித்து பாலிவுட்டில் அறிமுகமானவர். தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். தனுஷ் நடித்த அத்ரங்கி ரே என்ற படத்திலும் நாயகியாக இவர் நடித்து இருக்கிறார் 

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்