சென்னை,
திரையுலகில் பல ஆண்டுகளாக முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை திரிஷா, நாளை தனது பிறந்தநாளைக் கொண்டாட உள்ளார்.
இந்நிலையில், தனது பிறந்தநாளை முன்னிட்டு திரிஷா திருப்பதிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இது தொடர்பான வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
40 வயதைக் கடந்தும் இன்றும் பிஸியான நாயகியாக அவர் வலம் வருகிறார். திரிஷா நடிப்பில் அடுத்து 'கருப்பு' திரைப்படம் வரும் 14-ம் தேதி வெளியாக உள்ளது.
திரிஷா பிறந்தநாளான நாளை, தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.