சினிமா செய்திகள்

அதிதிராவின் சினிமா அனுபவங்கள்

தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி ஜோடியாக காற்று வெளியிடை படத்தில் நடித்து பிரபலமானவர் அதிதிராவ் ஹைத்ரி. செக்க சிவந்த வானம், சைக்கோ படங்களிலும் நடித்தார்.

தினத்தந்தி

தற்போது ஹேய் சினாமிகா படத்தில் நடித்து வருகிறார். சினிமா அனுபவங்கள் குறித்து அதிதிராவ் அளித்துள்ள பேட்டியில், சினிமாவுக்கு மொழி எல்லையே இல்லை. கடின உழைப்பும், அழுத்தமான கதையும் இருந்தால் வெற்றி வந்து சேரும். தியேட்டர், ஓ.டி.டி. ஆகிய இரண்டிலும் வெளியாகும் படங்களுக்கும் லாபமும், நஷ்டமும் இருக்கும். ஓ.டி.டி. தளம் வெளிநாட்டில் இருக்கும் ரசிகர்களையும் எளிதாக போய் சேர்ந்துவிடும். தியேட்டர்களில் படம் பார்ப்பது என்பது ஒரு மேஜிக். ஊரடங்கில் தியேட்டர்களை மூடி விட்டதால் ஓ.டி.டி. தளம் சிறந்ததாக ஆகி விட்டது. ஊரடங்கில் சினிமா மொத்தமாக முடங்கிவிட்டது. நான் எந்த மொழி படத்தில் நடித்தாலும் படப்பிடிப்பு தளத்தில் ஏதோ ஒன்றை கற்றுக்கொள்கிறேன். படங்களில் ஆர்வத்தோடு நடித்தால் கஷ்டம் தெரியாது. மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தினால்தான் நடிகையானேன். அவர் என் உலகையே மாற்றிவிட்டார். நடிகையாக இருப்பது மகிழ்ச்சி' என்றார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்