சினிமா செய்திகள்

சரித்திர கதையில்... அனார்கலியாக அதிதி ராவ்

முகலாய மன்னன் அக்பரின் வாழ்க்கை வரலாற்று கதையாக தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாராகும் ”தாஜ்” என்ற வெப் தொடரில் அனார்கலி வேடத்தில் அதிதிரா நடித்துள்ளனர்.

தினத்தந்தி

மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்து பிரபலமானவர் அதிதி ராவ் ஹைத்ரி. செக்க சிவந்த வானம், சிருங்காரம், சைக்கோ, ஹேய் சினாமிகா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது முகலாய மன்னன் அக்பரின் வாழ்க்கை வரலாற்று கதையாக தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாராகும் தாஜ் என்ற வெப் தொடரில் அதிதி ராவ் நடித்து இருக்கிறார். இதில் அக்பர் கதாபாத்திரத்தில் நசுருதீன் ஷாவும், அவரது மகன் சலீமாக ஆஷிம் குலாட்டியும், இவரது காதலி அனார்கலி வேடத்தில் அதிதிராவும் நடித்துள்ளனர்.

அனார்கலியாக நடித்தது குறித்து அதிதி ராவ் ஹைத்ரி கூறும்போது, "சரித்திர கதைகள் எனக்கு பிடிக்கும், அனார்கலியாக நடிக்க என்னை அணுகியபோது மகிழ்ச்சியாகவும், பயமாகவும் இருந்தது. அனார்கலி கதாபாத்திரம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

முகல் ஏ ஆசம் படத்தில் மதுபாலா அனார்கலி கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்து இருந்தார். அனார்கலியாக நடிக்க வாய்ப்பு கிடைத்து அதிர்ஷ்டம்'' என்றார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு