சினிமா செய்திகள்

வருமான வரித்துறை சோதனையால் அச்சமா? நடிகை டாப்சி விளக்கம்

தமிழ், தெலுங்கு, இந்தி பட உலகில் பிரபல நடிகையாக இருக்கும் டாப்சி மற்றும் இந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆகியோர் வீடுகளில் சில தினங்களுக்கு முன்பு வருமான வரிதுறையினர் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

தினத்தந்தி

தமிழ், தெலுங்கு, இந்தி பட உலகில் பிரபல நடிகையாக இருக்கும் டாப்சி மற்றும் இந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆகியோர் வீடுகளில் சில தினங்களுக்கு முன்பு வருமான வரிதுறையினர் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. இருவரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்ததால் இந்த சோதனை நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. சோதனையில் ரூ.650 கோடிக்கு மேல் வருமான வரி மோசடி நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டதாக விமர்சனங்களும் கிளம்பின. நடிகை கங்கனா ரணாவத்தும் டாப்சியை கேலி செய்து இருந்தார். இந்த சோதனை குறித்து டாப்சி அளித்துள்ள பேட்டியில், நான் சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கிறேன். அந்த கண்ணோட்டத்திலேயே மக்களும் என்னை பார்க்கிறார்கள். எனது அலமாரியில் எலும்பு கூடுகள் இல்லை. நான் நேர்மையாக இருக்கிறேன். அதுவே எனக்கு அச்சம் இல்லாமல் இருப்பதற்கான நம்பிக்கையை கொடுக்கிறது. பொய் சொல்ல என்னால் முடியாது. யாராவது என்னை குறிவைத்து தாக்கினால் அதே பாணியில் அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று நினைக்கமாட்டேன். அமைதியாக எளிமையாக வாழ விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது