சினிமா செய்திகள்

13 வருடங்களுக்கு பிறகு தயாரிப்பாளர் நாற்காலியில் அமர்ந்துள்ளேன்- சவுந்தர்யா ரஜினிகாந்த்

சவுந்தர்யா ரஜினிகாந்த் அமேசான் பிரைம் ஓடிடி தளத்துடன் இணைந்து புதிய வெப் தொடர் ஒன்றை தயாரிக்கிறார்.

தினத்தந்தி

நடிகர் ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த். இவர் கோச்சடையான்', தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி 2' போன்ற படங்களை இயக்கி பிரபலமானார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் சினிமாவிற்கு திரும்பியுள்ள சவுந்தர்யா, அமேசான் பிரைம் ஓடிடி தளத்துடன் இணைந்து 'கேங்க்ஸ்' என்ற புதிய வெப் தொடர் ஒன்றை தயாரிக்கிறார்.

நோவா ஆபிரஹாம் இயக்கும் இந்த வெப்தொடரில் நடிகர் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கிறார். 'கேங்க்ஸ்' வெப்தொடரின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த நிலையில், இந்த வெப்தொடரின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள சவுந்தர்யா பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அந்தப் பதிவில் அவர், "2010-ம் ஆண்டு கோவா திரைப்படத்தை தயாரித்தேன். 13 வருடங்கள் கழித்து மீண்டும் தயாரிப்பாளர் நாற்காலியில் அமர்ந்துள்ளேன். இன்று படப்பிடிப்பு தொடங்கியது" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு