சினிமா செய்திகள்

எனக்கு வந்த தமிழ் பட வாய்ப்பு ஐஸ்வர்யா ராய்க்கு மாறியது - மஞ்சுவாரியர்

எனக்கு வந்த தமிழ் பட வாய்ப்பு ஐஸ்வர்யா ராய்க்கு மாறியது என்று மஞ்சுவாரியர் கூறியுள்ளார்.

தினத்தந்தி

மலையாளத்தில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் மஞ்சுவாரியர் தமிழில் 'அசுரன்' படம் மூலம் அறிமுகமானார். அஜித்குமாருடன் நடித்த 'துணிவு' படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் அஜித்குமார், மம்முட்டி, ஐஸ்வர்யா ராய், தபு ஆகியோர் நடித்து 2000-ல் வெளியான கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் என்னைத்தான் அணுகினர் என்று மஞ்சுவாரியர் கூறியுள்ளார்.

இதுகுறித்து மஞ்சுவாரியர் அளித்துள்ள பேட்டியில், ''நான் அசுரன் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானேன். ஆனால் அசுரன் படத்துக்கு முன்பே தமிழ் படங்களில் நடிக்க நிறைய அழைப்புகள் வந்தன. அப்போது மலையாளத்தில் அதிக படங்களில் பிசியாக நடித்து கொண்டு இருந்தததாலும் வேறு சில காரணங்களாலும் தமிழ் படங்களில் நடிக்க தேதி ஒதுக்க முடியவில்லை.

இப்படி நான் நடிக்காமல் தவற விட்ட படங்களில் ஒன்று 'கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்'. அந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்து இருந்த கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் என்னைத்தான் இயக்குனர் ராஜீவ் மேனன் அணுகி அழைத்தார். அந்த படத்தில் நான் நடிக்க இயலாமல் போனதால் ஐஸ்வர்யா ராய் நடித்தார்'' என்றார்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை