சினிமா செய்திகள்

ஓ.டி.டி.யில் வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ் படத்துக்கு எதிர்ப்பு

ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக உள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்து வருகிறார்.

தினத்தந்தி

ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக உள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது தெலுங்கில் நானியுடன் டக் ஜெகதீஷ் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படம் தியேட்டர்களில் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் அடுத்த மாதம் ஓ.டி.டி. தளத்தில் வெளியிடுவதாக அறிவித்து உள்ளனர். டக் ஜெகதீஷ் படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட தெலுங்கானா தியேட்டர் அதிபர்களும், வினியோகஸ்தர் சங்கத்தினரும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

தெலுங்கானா பிலிம் சேம்பர் செயலாளர் சுனில் நாரன் தலைமையில் நடந்த தியேட்டர் அதிபர்கள் சங்க கூட்டத்தில் டக் ஜெகதீஷ் படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிடுவதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. சுனில் நாரன் கூறும்போது, பெரிய பட்ஜெட் படமான டக் ஜெகதீஷ் படத்தை ஓ.டி.டி.யில் வெளியிடும் முடிவை கைவிட வேண்டும். தியேட்டரில் வெளியிட்டால்தான் ரசிகர்களை திரையரங்குக்கு வரவழைக்க முடியும்'' என்றார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்