சென்னை,
'வீரபாண்டியபுரம்' திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் சுசீந்திரனுடன் மீண்டும் இணைந்துள்ள நடிகர் ஜெய், 'குற்றம் குற்றமே' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகை திவ்யா துரைசாமி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், பாரதிராஜா, ஸ்மிருதி வெங்கட், ஹரிஷ் உத்தமன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரித்துள்ள இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாக உள்ளது. தமிழ்ப்புத்தாண்டையொட்டி வருகிற 14-ந்தேதி கலைஞர் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த படத்திற்கு அஜேஷ் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலை இயக்கம் சேகர் பி செய்துள்ளார்.
இந்த நிலையில் 'குற்றம் குற்றமே' படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரைலரை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். இந்த டிரைலர் தற்போது வைரலாகி வருகிறது.