சினிமா செய்திகள்

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 'சொப்பன சுந்தரி' படத்தின் புதிய அப்டேட்

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 'சொப்பன சுந்தரி' படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது அவர் இயக்குனர் எஸ்.ஜி.சார்லஸ் இயக்கத்தில் 'சொப்பன சுந்தரி' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் லட்சுமி பிரியா, சரமவுலி, தீபா சங்கர், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஹம்சினி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு அஜ்மல் தாஷீன் இசையமைத்துள்ளார். விஷால் சந்திரசேகர் பின்னணி இசையமைத்துள்ளார். டார்க் காமெடி ஜானரில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்றது.

இந்த நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'சொப்பன சுந்தரி' படத்தின் ஆடியோ விரைவில் வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 'சொப்பன சுந்தரி' திரைப்படம் மார்ச் மாதம் வெளியாவதற்கு தயாராக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு