சினிமா செய்திகள்

விக்ரம் படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் காட்சிகள் நீக்கம்

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள அனைத்து காட்சிகளையும் துருவ நட்சத்திரம் படத்தில் இருந்து கவுதம் மேனன் நீக்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த 'துருவ நட்சத்திரம்' படம் சில பிரச்சினைகளால் கடந்த சில வருடங்களாக கிடப்பில் போடப்பட்டது. இந்த படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில் தற்போது மீண்டும் படத்தின் இறுதிக்கட்ட பட வேலைகள் தொடங்கி உள்ளன. ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தில் ரிதுவர்மா, ராதிகா, சிம்ரன், பார்த்திபன் ஆகியோரும் நடித்துள்ளனர். ஐஸ்வர்யா ராஜேசும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். பல்வேறு இடங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டு இருந்தன.

இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள அனைத்து காட்சிகளையும் துருவ நட்சத்திரம் படத்தில் இருந்து கவுதம் மேனன் நீக்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

படத்தில் நடிக்கும் நடிகர்-நடிகைகள் பட்டியலுடன் சமீபத்தில் வெளியான துருவ நட்சத்திரம் பாடலில் ஐஸ்வர்யா ராஜேஷ் பெயர் இடம்பெறவில்லை. படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் இல்லாத வகையில் கதையில் சில மாற்றங்கள் செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு