கோவாவில் இருந்து சென்னை திரும்பியபோது எடுக்கப்பட்ட அஜித் மற்றும் அவரது குடும்பத்தினரின் வீடியோ வைரலாக பரவி வருகிறது. பொதுவாகவே திரையுலகை சேர்ந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பற்றி தெரிந்துகொள்வதில் ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகம். ஆனால் தங்களது புகழ் வெளிச்சம், குடும்பத்தார் மீது குறிப்பாக குழந்தைகள் மீது படர்வதை பல முன்னணி பிரபலங்கள் விரும்புவதில்லை. கேமராக் கண்களுக்கு சிக்காமல், குழந்தைகளை மறைத்தே வளர்க்கிறார்கள். ஆனால், செல்போன் உதவியால் எப்போதும் கேமராவுடன் அனைவரும் வளைய வரும் இந்நாட்களில், இது சாத்தியப்படுவதில்லை. பொது இடங்களில் இத்தகைய பிரபலங்களைப் பார்க்கும்போது, உடனடியாக அவர்களை தங்களது கேமராவிற்குள் பிடித்துவிட ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அதேபோல், அவர்களுடன் செல்பி எடுத்துக் கொள்ளவும் ஆசைப்படுகிறார்கள்.