அஜித்குமார் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தியில் அமிதாப்பச்சன் நடித்து வெற்றி பெற்ற பிங்க் படத்தின் தமிழ் பதிப்பாக தயாராகி உள்ளது. இதில் வித்யாபாலன் ஜோடியாக வருகிறார். வினோத் டைரக்டு செய்துள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்துள்ளார்.