சினிமா செய்திகள்

அஜித் குமாருக்கு தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா வாழ்த்து

ஸ்பெயினின் பிரெஸ்டிஜியஸ் சர்க்யூட் டி பார்சிலோனாவில் நடந்த போட்டியில் அஜித்குமார் ரேஸிங் அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது.

தினத்தந்தி

நடிகர் அஜித் குமார், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மட்டுமல்லாமல், ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்கிறார். 'குட் பேட் அக்லி' படத்திற்கு பிறகு கார் ரேஸில் முழு கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் அஜித்குமார்.அஜித்தின் அடுத்த திரைப்படமான ஏகே65 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித், அஜித்குமார் ரேஸிங் என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்த கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் பெற்றுள்ளது.ஸ்பெயினின் பிரெஸ்டிஜியஸ் சர்க்யூட் டி பார்சிலோனாவில் நடந்த கன்ஸ்ட்ரக்டர்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித்குமார் அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது. இந்தாண்டு இறுதியில் மலேசியாவிலும், அடுத்த ஆண்டில்அபுதாபியில் நடைபெறும் கார் பந்தய போட்டிகளிலும் அஜித்குமார் ரேசிங் அணி கலந்து கொள்கிறது.

இந்த நிலையில், ஸ்பெயினில் மஹிந்திரா பார்முலா இ ஜென் 2 காரை நடிகர் அஜித் குமார் ஓட்டி சோதித்து பார்த்தார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்புகைப்படங்களை எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள அஜித்குமார் ரேசிங் அணி, மேலும் தகவல்களுக்கு காத்திருங்கள் என பதிவிட்டுள்ளது.

இந்நிலையில், தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, அஜித் குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், ஸ்பெயின், ஸ்பீடு மற்றும் ஸ்டைல். சக்திவாய்ந்த மற்றும் கிளாசிக் காம்பினேஷன். அஜித்குமாரை ரேஸிங் டிராக்கில் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. உங்களின் அடுத்த சாதனைக்காக காத்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை