நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து அஜித்குமார், வலிமை படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக பிரபல இந்தி நடிகையும், காலா பட நாயகியுமான ஹூமாகுரோசி நடிக்கிறார். வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறார். சதுரங்க வேட்டை, நேர்கொண்ட பார்வை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கிய வினோத் டைரக்டு செய்கிறார்.
இது, அஜித் நடிக்கும் 59-வது படம். முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, கொரோனா தொற்று பரவுவதை தவிர்க்க படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. மீண்டும் படப்பிடிப்பை தொடங்க அரசு அனுமதி அளித்துள்ளது.
இருப்பினும் உச்ச நடிகர்கள் இன்னும் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளாத நிலையில், அஜித்குமார் கொரோனாவுக்கு அஞ்சாமல் துணிச்சலுடன், வலிமை படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்த படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடக்கிறது. அதில் அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன.
வில்லனின் அடியாட்களுடன் அஜித்குமார் மோதுவது போன்ற சண்டை காட்சிகளும் படமாக்கப்பட்டு வருகின்றன.