சினிமா செய்திகள்

25 ஆண்டு திருமண வாழ்க்கை .... மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடிய அஜித் - வைரலாகும் வீடியோ

நடிகர் அஜித் மற்றும் ஷாலினி தம்பதி தங்கள் 25-வது திருமண நாளை கொண்டாடி வருகின்றனர்.

தினத்தந்தி

நடிகர் அஜித், நடிகை ஷாலினி இருவரும் முதன்முதலில் ஜோடியாக நடித்த படம் அமர்க்களம். இயக்குனர் சரண் இப்படத்தை இயக்கினார். இந்நிலையில் பட ஷூட்டிங்கில் ஷாலினி காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தபோது அஜித் அவரை பாசத்துடன் பார்த்துக்கொண்டார். இதனால் ஷாலினிக்கு அஜித் மீது காதல் உருவானது. மேலும், பட ஷூட்டிங் நேரத்தில் இருவருக்கும் இடையே காதல் அதிகரித்தது. இதனையடுத்து, கடந்த 2000-ம் ஆண்டில் பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

தமிழ் பட ஹீரோயினாக இருந்து வந்த ஷாலினி நடித்த படம் அனைத்தும் 'ஹிட்' ஆகியது. அவருக்கு பட வாய்ப்புகள் வழங்க ஏராளமான தயாரிப்பாளர்கள் காத்து கிடந்தனர். ஆனால், அவர் இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என அறிவித்தார். அதைத் தொடர்ந்து சினிமாவில் இருந்தும் விலகினார். 

இந்நிலையில், தற்போது அஜித்- ஷாலினிக்கு காதல் திருமணமாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனையொட்டி சென்னையில் உள்ள ரிசார்ட்டில் நண்பர்கள், உறவினர்களுக்கு விருந்து வழங்கி கொண்டாடினர். இவர்கள் ஜோடியாக கேக் வெட்டி தங்களது 25-வது ஆண்டு காதல் திருமணத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். அப்போது அவர்களுக்கு பிடித்த 'உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு' என்ற பாடல் ஒலிப்பது போன்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்