சினிமா செய்திகள்

அஜித்தின் அடுத்த படம்

மூன்றாவது முறையாக மீண்டும் வினோத் இயக்கும் படத்தில் அஜித் நடிக்க உள்ளார்.

தினத்தந்தி

அஜித்குமார் நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் பாடல், போஸ்டர் மற்றும் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன. இதில் அஜித் ஜோடியாக கியூமா குரோஷி நடித்துள்ளார். அடுத்து மூன்றாவது முறையாக மீண்டும் வினோத் இயக்கும் படத்தில் அஜித் நடிக்க உள்ளார்.

இந்த படம் குறித்து வினோத் கூறும்போது, அஜித்தின் புதிய படம் வலிமை போன்று இல்லாமல் குறைவான அதிரடி சண்டை காட்சிகள் கொண்ட படமாக இருக்கும். ஆனால் வசனங்கள் அதிகம் இருக்கும் வகையில் கதையை உருவாக்கி உள்ளோம். உலக அளவில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் ஒரு முக்கிய பிரச்சினை படத்தின் மையக்கருவாக இருக்கும் என்றார்.

மேலும் அவர் கூறும்போது, வலிமை படத்தில் ஒரு குடும்பத்தின் மகனாக அஜித் வருகிறார். இதற்காக தலை முடிக்கு கருப்பு சாயம் பூசும்படி சொன்னேன். முதலில் தயங்கியவர் பின்னர் கதைக்கு தேவை என்பதை உணர்ந்து ஒப்புக்கொண்டார். அஜித்திடம் இருந்து இயக்குனர் ஒரு விஷயம் தேவை என்று எதிர்பார்த்தால் அதற்கு மறுப்பு சொல்ல மாட்டார். அவரது கதாபாத்திரத்தை எப்படி வேண்டுமானாலும் உருவாக்கும் சுதந்திரத்தை இயக்குனருக்கு கொடுப்பார் என்றார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்