சினிமா செய்திகள்

அஜித்தின் ‘வலிமை’ பொங்கலுக்கு ரிலீஸ்

அஜித்குமார் வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் ரஷியாவில் நடந்த சண்டை காட்சிகளோடு படப்பிடிப்பை முடித்து உள்ளனர்.

அஜித்குமார் வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் ரஷியாவில் நடந்த சண்டை காட்சிகளோடு படப்பிடிப்பை முடித்து உள்ளனர். தற்போது தொழில்நுட்ப பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன. வலிமை படம் வருகிற தீபாவளி பண்டிகையில் திரைக்கு வர வாய்ப்பு உள்ளதாக தகவல் பரவியது.

தீபாவளிக்கு ரஜினிகாந்தின் அண்ணாத்த படமும் வெளியாக உள்ளதால் இரண்டு படங்களின் ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்த்தனர். இந்த நிலையில் தீபாவளிக்கு பதிலாக டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையில் வலிமை படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் ஆலோசிப்பதாக இன்னொரு தகவலும் வெளியானது.

அண்ணாத்த படம் வெளியாகும் நாளில் வலிமை படத்தை வெளியிட்டால் வசூல் பாதிக்கும் என்பதால் ரிலீசை தள்ளிவைக்க யோசிப்பதாக கூறப்பட்டது. ஆனாலும் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் அறிவிப்பு எதையும் வெளியிடாமல் இருந்தனர். இந்த நிலையில் வலிமை படம் பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் நேற்று டுவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

வலிமை படத்தில் நாயகியாக கியூமா குரோஷி நடித்துள்ளார். வினோத் இயக்கி உள்ளார். இந்த படத்தில் வரும் அஜித்குமார் தோற்றத்தை படக்குழுவினர் ஏற்கனவே வெளியிட்டனர். நாங்க வேற மாதிரி என்ற பாடலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு