சினிமா செய்திகள்

’அகண்டா 2’: காலவரையின்றி ஒத்திவைப்பு - படக்குழு அறிவிப்பு

“அகண்டா 2” திரைப்படம் இன்று வெளியாக இருந்தநிலையில், காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

நந்தமுரி பாலகிருஷ்ணா மற்றும் போயபதி ஸ்ரீனுவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அகண்டா 2 திரைப்படம் இன்று வெளியாக இருந்தநிலையில், காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான 14 ரீல்ஸ் பிளஸ் புதிய ரிலீஸ் தேதியை தெரிவிக்காமல் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட் பதிவில், கனத்த இதயத்துடன், தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் அகண்டா 2 திட்டமிட்டபடி வெளியாகாது என்பதை மிகவும் வேதனையுடன் உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறோம். படத்திற்காக காத்திருக்கும் ஒவ்வொருக்கும் இது ஏற்படுத்தும் ஏமாற்றத்தை நாங்கள் உண்மையிலேயே புரிந்துகொள்கிறோம். இதற்காக மனமார்ந்த மன்னிப்புப்புக்கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை