லாஸ் ஏஞ்சல்ஸ்,
சினிமாத் துறையின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் துவங்கியது. 90-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவை தொகுப்பாளர் ஜிம்மி கிம்மெல் 2-வது முறையாக தொகுத்து வழங்கினார். ஹாலிவுட் நடிகர்கள் உள்பட பல்வேறு திரையுலக பிரபலங்கள் இதில் பங்கேற்றுள்ளனர். மொத்தம் 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.
இதில், கிறிஸ்டோபர் நோலனின் டன்கர்க் திரைப்படம் 8 பிரிவுகளின் கீழ் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது. இரண்டாம் உலகப்போர் பற்றிய படமான டன்கர்க் சிறந்த ஒலித்தெகுப்பு மற்றும் ஒலி இணைப்பு, சிறந்த படத்தொகுப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் விருது வென்றுள்ளது. விருதுகள் இன்னும் அறிவிக்கப்பட்டு வருவது கவனிக்கத்தக்கது. கிறிஸ்டோபர் நோலனின் டன்கர்க் திரைப்படம் 8 பிரிவுகளின் கீழ் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.