சினிமா செய்திகள்

ஹாலிவுட்டில் அலியா பட்

தினத்தந்தி

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழும் அலியா பட், நடிகர் ரன்வீர் கபூரை கடந்த ஆண்டு திருமணம் செய்தார். திருமணத்துக்கு பிறகு படங்கள் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

சமீபத்தில் ரன்வீர் சிங்குடன் அவர் நடித்த 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி' படத்தில் அவரது நடிப்புக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

அலியா பட் ஹாலிவுட்டிலும் அறிமுகமாக இருக்கிறார். டாம் ஹார்பெர் இயக்கும் 'ஹார்ட் ஆப் ஸ்டோன்' என்ற ஆக் ஷன் படத்தில் கால் கடோட், ஜேமி டோர்னன் ஆகியோருடன் இணைந்து அலியா பட் நடித்து கொண்டிருக்கிறார்.

இதுகுறித்து அலியா பட் கூறுகையில், "படப்பிடிப்பின் போது ஆங்கிலத்தில் பேசுவது கடினமாக இருந்தது. ஆங்கிலத்தில் பேசுவேன் என்றாலும், இந்தியில் தான் அதிகம் வசனம் பேசி நடித்துள்ளேன். ஆனால், இப்போது முழுவதுமாக ஆங்கிலத்தில் பேசி நடிப்பது எனக்கு வித்தியாசமாக இருக்கிறது. மற்றபடி எந்த வித்தியாசமும் தெரியவில்லை'', என்றார்.

அலியா பட்டை, தமிழ் சினிமாவில் நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை