சினிமா செய்திகள்

சர்ச்சையில் இளம் நடிகை

விளம்பர படம் ஒன்றில் நடித்து ரசிகர்களிடம் வறுபட்டு வருகிறார் நடிகை ஆலியா பட்.

தினத்தந்தி

நடிகர் நடிகைகள் சமீப காலமாக அதிக விளம்பர படங்களில் நடிக்க தொடங்கி உள்ளனர். சிலர் மதுபானம் மற்றும் புகையிலை விளம்பர படங்களில் நடிக்கிறார்கள். இந்தி நடிகர் அக்ஷய்குமார் பான் மசாலா விளம்பரத்தில் நடித்து ரசிகர்களின் கடுமையான எதிர்ப்புக்கு ஆளானார். இதையடுத்து இனிமேல் இதுபோன்ற விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று மன்னிப்பு கேட்டார். தமன்னா, பூஜா ஹெக்டே, ஹன்சிகா, காஜல் அகர்வால் ஆகியோர் மதுபான விளம்பரங்களில் நடித்து எதிர்ப்புக்கு ஆளானார்கள்.

இந்த நிலையில் பிரபல இந்தி இளம் நடிகை அலியாபட் சர்க்கரையால் தயாரிக்கப்பட்ட பொருட்களை சாப்பிடவும், குடிக்கவும் தூண்டும்படியான விளம்பரத்தில் நடித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஏற்கனவே தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் சர்க்கரை கலந்த பானத்தை குடிக்க மாட்டேன். சர்க்கரை ஆரோக்கியத்துக்கு கேடு என்று சொல்லி இருந்தார்.

அதை சுட்டி காட்டி, இப்போது ஏன் சர்க்கரை கலந்த பானத்தை குடிக்கும் விளம்பரத்தில் நடித்து இருக்கிறீர்கள்? விஷத்தை குடிக்க எங்களை தூண்டுகிறீர்களா? என்று ரசிகர்கள் வலைத்தளத்தில் சாடி வருகிறார்கள்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்