சினிமா செய்திகள்

விருதை தனது ரசிகர்களுக்காக அர்ப்பணித்த அல்லு அர்ஜுன்

தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருதுகள் 2025 இல் பல்துறை நடிகருக்கான விருதை அல்லு அர்ஜுன் பெற்றார்.

தினத்தந்தி

சென்னை,

நடிகர் அல்லு அர்ஜுன் சமீபத்தில் தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருதுகள் 2025 இல் பல்துறை நடிகருக்கான விருதைப் பெற்றார். இந்த விருதை அல்லு அர்ஜுன் தனது ரசிகர்களுக்கு அர்ப்பணித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில்,

இந்த கவுரவத்திற்காக தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகளுக்கு நன்றி. தொடர்ச்சியான அன்பு மற்றும் ஆதரவுக்கு எனது ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி... இந்த விருதை உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன்," என்று தெரிவித்திருக்கிறார்.

அல்லு அர்ஜுன் தற்போது அட்லீ இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அறிவியல் புனைகதை திரில்லரில் நடித்து வருகிறார், இப்படத்திற்கு தற்காலிகமாக எஎ22xஎ2(AA22xA6)என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு